search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் வழங்க கோரிக்கை"

    • பஞ்சாயத்து தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மாணவியருக்கு உடனடி யாக, 500 லிட்டர் சுத்திகரி க்கப்பட்ட குடிநீர் எடுத்து வர ஏற்பாடு செய்தார்.
    • மாணவியர் ஒரு நாள் மட்டும் எங்களுக்கு தண்ணீர் வழங்கினால் போதாது எனவும், நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்மெ னவும் கூறி கோரிக்கை மனு அளித்தனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டையில் அரசினர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது.

    இதில், 50- க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு குடிநீர் வசதி சரிவர செய்து தரப்படவில்லை.

    அங்குள்ள போர்வெல் தண்ணீரில் ப்ளோரைடு அதிகமாக இருப்பதாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாணவியர் விடுதியை பார்வையிட்ட டவுன் பஞ்சாயத்து தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மாணவியருக்கு உடனடியாக, 500 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எடுத்து வர ஏற்பாடு செய்தார்.

    ஆனால் மாணவியர் ஒரு நாள் மட்டும் எங்களுக்கு தண்ணீர் வழங்கினால் போதாது எனவும், நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் கூறி கோரிக்கை மனு அளித்தனர்.

    அதை பெற்றுக்கொண்ட அம்சவேணி செந்தில்குமார், இது குறித்து பரிசீலித்து உடனடியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பொருத்தப்படும்.

    அதுவரை தினந்தோறும் மாணவியருக்கு ஆர்.ஓ., குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

    ×